பட்டினத்தாரின் மகன் வெளி நாடு போய் பணம் சம்பாதித்து வருவான் என்றால் பட்டினத்தார் கொடுத்தனுப்பிய விலையுயர்ந்த பொருட்களை கொடுத்து நெற்தவிடும் சாணத்தினால் செய்யப்பட்ட வறட்டிகளையும் கொண்டு வந்திருந்தான்.அது கண்ட பட்டினத்தார் கடுங்கோபமுற்று தனது கடையில் வைத்து மகனைத் திட்டிவிட மகன் வீட்டிற்குச் சென்று தன் அன்னையான சிவகலையிடம் ஒரு பேழையைக் கொடுத்துவிட்டு அந்தர்த் தியானம் ஆகிவிடுகிறான் (மறைந்துவிடுகிறான்).
பட்டினத்தார் தன் மகன் வீட்டிற்குச் சென்றவுடன்.தன் மகன் கொண்டு வந்த சாணத்தினால் செய்யப்பட்ட வறட்டிகளை உடைத்துப் பார்க்க உள்ளே நவரத்தினங்களும், வைரம் முதலானவைகளும் இருந்தன.நெற்தவிடு அத்தனையும் தங்கத் தூள்களாய் இருக்க பட்டினத்தார் வருந்தி வீட்டிற்கு ஒட, அவர் மனைவி சிவகலை மகன் கொடுத்த பேழையை எடுத்துக் கொடுத்து அதில் பெரும் செல்வம் இருப்பதாகக் கூற,பட்டினத்தார் அந்தப் பேழையைத் திறந்து பார்த்தார்.
அதில் ஒரு ஓலை நறுக்கும்,காதற்ற ஊசியும் இருந்தது.அந்த ஓலையில்
'காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே '
என்றிருந்தது.அந்த ஓலையில் கண்ட வார்த்தைகளுக்குப் பொருள் காது அறுந்து போன ஊசி தைக்கவும் உதவாது,எதற்கும் பயன்படாது, அதுகூட நாம் இறந்து போன பிறகு போகும் கடை வழியான, இறப்புக்குப்பின் வராது ,என்பதுதான். அதைக் கண்டதும் பட்டினத்தார்க்கு ஞானம் பிறந்தது.
அதன்பின் அவர் கீழ்க் கண்ட பாடலைப் பாடியபடியே தன் ஆடைகளைக் களைந்து கோவணம் அணிந்து துறவு பூண்டார்.அந்தப் பாடல் இதோ எங்கள் தாத்தா வைத்திருந்த மிகப் பழைய நூலில் இருந்து நகல் எடுத்து தங்களின் பார்வைக்காக கொடுத்துள்ளேன்.கண்டு இன்புறுவீர்களாக.
அதன் பொருள் பட்டைக் கிழித்து நன்றாகச் சுருட்டி அதில் பருமையான ஊசியையும் விரும்பி எடுத்து என் அடர்ந்த கூந்தலையுடைய என் மனைவியின் கையில் முன்பே கொடுத்து வைத்து,அதை என் கையில் நான் பெற்றவுடன் கனமான மாயம் செய்ய வல்லவளால் நேர்ந்ததான காமம் எல்லாம் விட்டுப் பிரியவென்று ,இவ்வாறு சிவம் மீண்டு ஞானம் கிடைத்து கடைத்தேற வழி பிறந்தது என்கிறார்.
நன்றி
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன் .
projectsatbangalore.com/EEE.html
ReplyDelete