Saturday, October 2, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 9

ஒரு முறை நாடெங்கும் வறட்சியாகி பசி,பஞ்சம் தலை விரித்து ஆடும் போது மன்னன் முதல் மக்கள் வரை அவ்வையாரிடம் மழை பெய்ய அருள் புரிய வேண்டி நிற்க.
அவ்வையார் கீழ்க்கண்ட பாடலைப் பாட மழை கொட்டித் தீர்த்தது.

நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்;-தொல்லுலகில் 
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.


நெல்லுக்கு நீர் பாய்ச்சும் போது அந்தத் தண்ணீர் வாய்க்கால் வழியோடி ஆங்காங்கே இருக்கும் புல்லுக்கும் பாயும்.அது போலவே இந்தத் தொன்மையான உலகில் நல்லார் ஒருவர் உள்ளாரேயானால் அவருக்காக எல்லோருக்கும் மழை பொழியும் எனக் கூறவும் மழை கொட்டித் தீர்த்தது.



நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்   

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்