சில புலவர்கள் பொறாமையின் காரணமாக அவ்வையார் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு அவரை நிந்தனை செய்து வந்தனர். ( இந்தக் காலத்தில் இவ்வளவு பெண்ணடிமைத்தனம் இருக்கும்போது, அந்தக்காலத்தில் எவ்வளவு இருந்திருக்கும்).
கம்பர் சிலம்பி என்றொரு தாசியை ஐந்நூறு பொன் பெற்று ஏழையாக மாற்றியதை அவ்வையார் பணக்காரியாக மாற்றியதால் அவ்வையார் மீது மிகுந்த காழ்ப்புணர்ச்சி கொண்டு அவரை நிந்தனை செய்த கதையை இப்போது பார்ப்போம்.
மேற்கண்ட நிகழ்ச்சி நடந்த பின் கம்பர் அவ்வையாரைப் பார்த்து அவ்வையாரை அடியே என்றழைப்பதற்காக
'ஒரு காலடி நாலடிப் பந்தலடீ'
கம்பர் கேட்க
அவ்வையார் கம்பரைப் பார்த்து
'எட்டேகால் லட்சணமே ! எமனே றும்பரியே !
மட்டில் பெரியம்மை வாகனமே !;-முட்டமேற்
கூரையில்லா வீடே ! குலராமன் தூதுவனே !
ஆரையடா சொன்னா யது ! '
அவ்வையார் சொல்ல கம்பர் வெட்கித் தலை குனிந்தார்.
{கம்பர் அவ்வையாரைப் பார்த்து அவ்வையாரை அடியே என்றழைப்பதற்காக'ஒரு காலடி நாலடிப் பந்தலடீ' என்று கேட்டது ஒரு கால் அடியாகவும் நாலிலைப் பந்தலடியாகவும் இருப்பது ஆரைக் கீரை.
அதற்கு அவ்வையார் கம்பரைப் பார்த்து எட்டு என்பது தமிழ் எழுத்துக்களில் 'அ' ,அதே போல் கால் என்பது தமிழ் எழுத்துக்களில் ' வ '
அதன்பின் உள்ள லட்சணமே சேர்ந்தால் அவலட்சணமே! என்றும், எமனேறும் பரி என்பது எருமை மாடே! என்றும், மட்டில் பெரியம்மை வாகனமே !என்பது மூத்த தேவியான மூதேவியின் வாகனமான கழுதையே! என்றும்,முட்டமேற் கூரையில்லா வீடே !, என்பது கூரையில்லா வீடு குட்டிச்சுவரே! என்றும், குலராமன் தூதுவனே !என்பது குல ராமன் தூதுவன் அனுமன் குரங்கு என்பதால் குரங்கே! என்றும், ஆரையடா சொன்னாய் அது! என்பது ஆரைக் கீரையைத்தானடா சொன்னாய்! என்றும், பொருள் தரும்.
நன்றி
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்