முன் பதிவில் கட்டளைக் கலித்துறை என்பது பற்றி எழுதியிருந்தேன்.இது மிக கடினமான யாப்புக் கட்டமைப்புக் கொண்டது.
அதில் முதற்சீர் நேரசையில் இருந்தால் அந்தப் பாடல் ஒவ்வொரு அடியிலும் ஒற்றெழுத்துக்கள் நீக்கி 16 எழுத்துக்களைக் கொண்டு முதல் மூன்று சீர்கள் ஒவ்வொரு அடியிலும் இயற்சீர் வெண்டளையும்,வெண்சீர் வெண்டளையும் கொண்டு , மொத்தப் பாடலில் ஒற்றெழுத்துக்கள் நீக்கி 64 எழுத்துக்கள் வரும்.
முதற்சீர் நிரைசையில் இருந்தால் அந்தப் பாடல் ஒவ்வொரு அடியிலும் ஒற்றெழுத்துக்கள் நீக்கி 17 எழுத்துக்களைக் கொண்டு முதல் மூன்று சீர்கள் ஒவ்வொரு அடியிலும் இயற்சீர் வெண்டளையும்,வெண்சீர் வெண்டளையும் கொண்டு
மொத்தப் பாடலில் ஒற்றெழுத்துக்கள் நீக்கி 68 எழுத்துக்கள்
வரும்.
ஒவ்வொரு அடியிலும் ஈற்றுச்சீர்,அதாவது நான்காவது சீர் கருவிளங்காய்,கூவிளங்காய், என்ற வாய்பாட்டைக் கொண்டு முடியும்.
இது போல முழுவதும் கட்டளைக் கலித்துறையில் எழுதப்பட்ட நூல்கள் கோவை என அழைக்கப்படும்.
(1)அம்பிகாபதிக் கோவை
(2)பாண்டிக் கோவை
(3)தஞ்சை வாணர் கோவை
(4)திருக் கோவையார்
(5)யாப் பெருங்கலக் காரிகை
(5)யாப் பெருங்கலக் காரிகை
இன்னும் வலைப் பதிவு நிறைவடையவில்லை
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
காத்திருக்கிறேன்...
ReplyDeleteகருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே, இதோ வந்தூட்டேன்!!!என்று வந்தால் வலைப்பூ சரியாக வரவில்லை(CONTINUOUSLY GET LOADING).
ReplyDeleteமன்னிக்கவும்.எழுதத் தயார் ஆனால் எழுத வலைப்பூ எழுத விடவில்லை.பொறுமை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
தமிழாசிரியர் தங்களிடம் தோற்றார் போங்கள் தமிழை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்திருக்கிறீர்கள். தமிழ் இலக்கணத்தில் நான் சற்று வீக்தான்.
ReplyDeleteநன்றி.
சு. மணிகண்டன்
பாட்டும் நானே பாவமும் நானே பாடலில்
ReplyDeleteஅசையும் பொருளின் இசையும் நானே
இதன் அர்த்தம் விளக்குங்கள் ஜி
மன்னிக்கவும்! இந்தப் பதிவைக் கவனிக்கவில்லை! 'தங்கமே தாமரை மொட்டு' என்று தேடியதில் கூகுள் தலைவரால் தங்களது வலைப்பதிவுக்கு மட்டுமே வழிகாட்ட முடிந்தது. அந்தப் பதிவைப் படித்துவிட்டு அப்படியே ஓடிவிட்டேன்!!!
ReplyDeleteஅபிராமி அந்தாதியும் கட்டளைக் கலித்துறையே!
ReplyDelete