அப்போது,
சோழ நாட்டில் சிலம்பி என்றொரு தாசி கம்பருடைய வாக்கினால் பாடப் பெற்றால் தான் மிகுந்த செல்வமுடையவளாக ஆகலாம் என்று எண்ணி கம்பரிடம் தான் வைத்திருந்த ஐந்நூறு பொன்னைக் கம்பரிடம் கொடுத்து அவள் தன்னைப் பாடச் சொல்லிக் கேட்க அவர் அந்த ஐந்நூறு பொன்னை வாங்கிக் கொண்டு நான் ஆயிரம் பொன்னுக்குத்தான் ஒரு பாட்டுப் பாடுவேன் ,என்று கூறி நீ தந்த ஐந்நூறு பொன்னுக்கு அரைப் பாட்டுத்தான் பாடுவேன் என்று கூறி
'தண்ணீரும் காவிரியே ; தார் வேந்தன் சோழனே ;
மண்ணாவதும் சோழ மண்டலமே '
என்று கம்பர் அரைப்பாட்டுப் பாடி நிறுத்திவிட்டார்.கம்பருடைய வாக்கினால் பாடப் பெற்றால் தான் மிகுந்த செல்வமுடையவளாக ஆகலாம் என்று எண்ணி நாம் இவ்வளவு நாள் சேர்த்து வைத்த பணத்தை கொடுத்தால் இவர் பாதியில் பாட்டை நிறுத்திவிட்டாரே என்று வருந்தினாள்.இவ்வளவு நாள் சேர்த்து வைத்த பணமும் போய் நாம் நினைத்தது போல் கவி வாயால் பாடப் பெற்றால் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்று எண்ணினால்,கையிலிருந்த காசைக் கொடுத்து வறுமையை வாங்கி ,உள்ளதும் போய் பஞ்சைப் பராரியாய், உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாது ஆகிவிட்டோமே என்று நொந்து போனாள்.
அவளது ஊழ்வினைப் பயன் காரணமாக அவள் வீட்டு வழியில் சென்ற
அவ்வையார் களைப்பின் மிகுதியால் அவள் வீட்டில் அமர்ந்து 'அம்மா வெயில் களைப்பினால் அவதியுற்றிருக்கிறேன், சிறிது கூழ் இருந்தால் ஊற்று ' என்று வேண்டினாள். உடனே அந்தத் தாசியானவள் வீட்டின் உள்ளே சென்று தான் குடிக்க வைத்திருந்த கூழைக் குடிக்கக் கொடுத்தாள். அவ்வளவில் அவ்வையார் களைப்பு நீங்கி இது உன் வீட்டின் முன் பாதிக்கவி எழுதி இருக்கிறதே என்று கேட்க, சிலம்பி கம்பருடைய வாக்கினால் பாடப் பெற்றால் தான் மிகுந்த செல்வமுடையவளாக ஆகலாம் என்று எண்ணி ஐந்நூறு பொன்னை இழ்ந்த கதையைச் சொன்னாள்.
உடனே அவ்வையார்'கம்பர் பொன்னுக்குப் பாடி என்றால் நான் கூழுக்குப் பாடி ' எனக் கூறி மீதியை நான் பாடித் தருகிறேன் என்று கூறி
'--------------------------------------------------------------------------------;-பெண்ணாவாள்
அம்பற் சிலம்பி அரவிந்தத் தாள ணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு'
என அவ்வையார் முடித்து வைக்கவும். அவள் மிகுந்த செல்வம் மிகுந்தவளாய் ஆனாள்.
'தண்ணீரும் காவிரியே ; தார் வேந்தன் சோழனே ;
மண்ணாவதும் சோழ மண்டலமே
;-பெண்ணாவாள்
அம்பற் சிலம்பி அரவிந்தத் தாள ணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு'
இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட கம்பர் அவ்வையார் மீது மிகுந்த காழ்ப்புணர்ச்சி கொண்டு அவரை நிந்தனை செய்த கதையை அடுத்தசில தனிப்பாடற் காட்சிகள் 8 ல் காணலாம்
நன்றி
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்